கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகல கொண்டாட்டம்...!

கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகல கொண்டாட்டம்...!

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், திரளான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  இந்நிலையில் நடப்பாண்டிற்கான பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  பெருவிழாவை ஒட்டி சூரிய வட்டம், சந்திர வட்டம், கிளி, அன்ன உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா தினசரி நடைபெற்று வந்த நிலையில், பங்குனி பெருவிழாவின் திருத்தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதையும் படிக்க : மாணவிகள் புகார் கூறிய ஆசிரியர்களுக்கு கல்லூரிக்குள் அனுமதியில்லை...மாநில மகளிர் ஆணைய தலைவி அறிவிப்பு!

விழாவை ஒட்டி தேரில் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் எழுந்தருளிய நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலின் நான்கு மாட வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.