மாணவிகள் புகார் கூறிய ஆசிரியர்களுக்கு கல்லூரிக்குள் அனுமதியில்லை...மாநில மகளிர் ஆணைய தலைவி அறிவிப்பு!

மாணவிகள் புகார் கூறிய ஆசிரியர்களுக்கு கல்லூரிக்குள் அனுமதியில்லை...மாநில மகளிர் ஆணைய தலைவி அறிவிப்பு!

பாலியல் புகார் சுமத்தப்பட்ட பேராசிரியர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார். 

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் வன்புணர்வு நடைபெறுவதாக புகார் எழுந்ததையொட்டி,
கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி விசாரணை மேற்கொண்டார்.  

இதையும் படிக்க : ஓபிஎஸ் வழக்கு.... இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது!!

இந்நிலையில், மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாலியல் புகார் சுமத்தப்பட்ட பேராசிரியர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகவும், தேர்வு நேரம் என்பதால் மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறினார். 

மேலும், மாணவிகளிடமிருந்து பாலியல் புகார்கள் எதுவும் வரவில்லை என கல்லூரி இயக்குனர் தெரிவித்தாக கூறிய அவர்,  கலாஷேத்ராவில் குறைதீர் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.