அண்ணன் ஸ்டைலில் கொரோனா நோயாளிகளை நலம் விசாரித்த கனிமொழி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை மையத்திற்குள் பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.

அண்ணன் ஸ்டைலில் கொரோனா நோயாளிகளை நலம் விசாரித்த கனிமொழி

தமிழகத்தின் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்த நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடியை கொரோனா இல்லா மாவட்டமாக மாற்ற கனிமொழி எம்பி தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வுகளை கையில் எடுத்துள்ளார்.

அந்த வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் போன்று, கொரோனா பாதுகாப்பு டிரஸ் அணிந்து, கொரோனா வார்டுக்குள் நுழைந்துவிட்டார் கனிமொழி.

கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அக்கறையுடன் நலம் விசாரித்துள்ளார் கனிமொழி. 

கொரோனாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு கொண்டார் கனிமொழி.