சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவக்கம்...!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக துவங்கியது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக துவங்கியது. 

5ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. 

இதையும் படிக்க : 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி!

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.