காமராஜரின் 120-வது பிறந்தநாள்: கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

இன்று கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா தமிழக அரசால் "கல்வி வளர்ச்சி" நாளாக கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வாழ்த்து செய்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காமராஜரின் 120-வது பிறந்தநாள்: கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்!

கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்! என தெரிவித்துள்ளார்.