ஜெயலலிதாவின் சொத்துக்கள் மாயம்...? நீதிமன்றத்தின் பதிலால் பரபரப்பு ....!

ஜெயலலிதாவின் சொத்துக்கள்  மாயம்...?    நீதிமன்றத்தின் பதிலால் பரபரப்பு ....!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் குறிப்பாக புடவைகள் செருப்புகள் சால்வைகள் உள்ளிட்ட அழியும் பொருட்களை விரைவில் ஏலம் இட வேண்டும் என பெங்களூருவைச்  சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அடுத்து உடனடியாக அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்து இந்த சொத்துக்களை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  இந்நிலையில், கடந்த மாதம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட கிரண் எஸ். ஐவளியை அரசு தரப்பு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமனம் செய்தது.  

அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்ட பிறகு இன்று இந்த வழக்கு பெங்களூர் மாநகர உரிமை இயல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி எச்.ஏ.மோகன் முன்பு விசாரணைக்கு வந்த போது தீபா தரப்பிலிருந்து சத்திய குமார் என்ற வழக்கறிஞர் ஆஜராகி ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துக்களும் அவரது வாரிசான தீபாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வாதம் செய்தார். 

மேலும், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வாரிசுகளுக்கு சேராது என கருத்து தெரிவித்த நீதிபதி, தீபா தரப்பு வழக்கறிஞரை உரிய முறையில் மனு தாக்கல் செய்து தங்கள் கோரிக்கையை வாதிட உத்தரவு பிறப்பித்தார். 

இதையும்  படிக்க      }  "மருந்து தட்டுப்பாடுகளை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..." - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இதன் பிறகு ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி நீதிபதியிடம், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள் சால்வைகள் செருப்புகள் போன்ற அழியும் பொருட்களை ஏலம் விட முதன்மை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் தாங்கள் கூறிய பல பொருட்கள் நீதிமன்றத்தின், அதாவது அரசு கருவூலத்தில் இல்லை என்று நீதிபதி பதில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவிடம் இருந்து முக்கியமான பொருட்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள பொருட்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பறிமுதல் செய்யப்பட்டுள்ள உண்மையான சொத்துக்களின் பட்டியல் குறித்து தான் மேல்முறையீடு செய்து தகவல்களை பெற உள்ளதாக நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதையும்  படிக்க      }  திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு தான் உயர்கல்வித்துறை வளர்ந்துள்ளது - பொன்முடி!