2 மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி.. பல்வேறு பரிசுகளை தட்டி சென்ற மாடு பிடி வீரர்கள்!

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை திரளான மக்கள் உற்சாகமாக பார்த்து ரசித்தனர்.

2 மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி.. பல்வேறு பரிசுகளை தட்டி சென்ற மாடு பிடி வீரர்கள்!

திருவெறும்பூர் அடுத்த நடராஜபுரத்தில் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

முதலில்  துளசி மகாநாட்டை சேர்ந்த பழங்கனாங்குடி மாரியம்மன் கோவில் மற்றும் துவாக்குடி, நடராஜபுரம் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த தேனூர் கிராமத்தில் சித்திரைத் திருவிழாவை  முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு பின்னர் ஜல்லிக்கட்டுக் காளைகள் களமிறக்கப்பட்டு வீரர்கள் எதிகொண்டு வருகின்றனர்.  மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.