கட்சிலிருந்து நீக்கப்பட்டவர் கொடியை பயன்படுத்துவது...வி.வி.ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

கட்சிலிருந்து நீக்கப்பட்டவர் கொடியை பயன்படுத்துவது...வி.வி.ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை சட்டம் நிறைவேற்றி இருப்பது தொழிலாளருக்கு விரோதமானது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டியுள்ளார். 

அதிமுகவின் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பரகுன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான வி.வி.ராஜன் செல்லப்பா கட்சியினர் மத்தியில் ஆலோசனை வழங்கினார். 

இதையும் படிக்க : 12 மணிநேர வேலை திருத்த சட்டம்...கண்டனம் தெரிவித்த எடப்பாடி...!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறினார். அதேசமயம், கட்சியிலிருந்து ஓபிஎஸ்சை நீக்கியது செல்லும் என்று நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தெளிவுபடுத்தி விட்டது. இருப்பினும், வேண்டுமென்றே ஓ.பன்னீர்செல்வம் சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்துவது வெட்கக்கேடான செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை திருத்த சட்டம் நிறைவேற்றி இருப்பது தொழிலாளருக்கு விரோதமானது என்றும் சாடியுள்ளார்.