கருணாநிதி ஆட்சியில் தான் சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டது - அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

கருணாநிதி ஆட்சியில் தான் சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டது - அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

தமிழ்நாடு முழுவதும் 14 ஆயிரத்து 983 தொழில் மனைகளுடன் 127 தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி சிட்கோ தலைமை அலுவலகத்தில்  208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, 208 தொழில்முனைவோர்களுக்கு பட்டா வழங்கி உரையாற்றினார்.

இதையும் படிக்க : ”ராஜா மந்திரியாக முடியாது” விமர்சனத்தை உடைத்தெறிந்து ”மந்திரியானார் டி.ஆர்.பி.ராஜா” 

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 14 ஆயிரத்து 983 தொழில் மனைகளுடன் 127 தொழிற்பேட்டைகள் இயங்கி வருவதாக பெருமிதம் கூறினார். 1970-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, குறு, சிறு, நடுத்தர தொழில்புரிவோருக்காக  சிட்கோ தொழிற்பேட்டைகளை உருவாக்கியதாக தெரிவித்தார்.