வேலி தாண்டி வந்தவர்களை விரட்டிட வேண்டும்....எச்.ராஜா காட்டம்....!!

நாட்டு பிரஜையாக இல்லாமல் வேலி தாண்டி வந்தவர்களை எதற்கு வாக்காளர் ஆக்க வேண்டும், வேலியை தாண்டி வந்தவர்களை வேலி தாண்டி விரட்டி விட வேண்டும் என எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

வேலி தாண்டி வந்தவர்களை விரட்டிட வேண்டும்....எச்.ராஜா காட்டம்....!!

சென்னையை அடுத்த நங்கநல்லூர் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா கூறுகையில்,

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனா 3வது அலையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஒரு நாளுக்கு 1 லட்சத்தி 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தொற்று உலகம் முழுவதும் தீவிரமாக பரவலாம் என உலக சுகாதார மையம், இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்து உள்ளது என்றார்.

இந்தியாவில் பிரதமர் முழு ஊரடங்கு என்றதும் மக்கள் ஏற்று ஒத்துழைத்தார்கள். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என கூறிய அவர், மாநில அரசு பாரபட்சம் இல்லாமல் கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.

சில பிரிவினை சக்திகள் மோடி வந்தால் ரேஷன் கடைகள் மூடிவிடுவார் என்றனர். மார்ச் மாதம் வரை கொரொனாவால் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு என 80 கோடி பேருக்கு வழங்கப்பட்டது. எப்படி பிரிவினைவாத சக்திகள் பீதி கிளப்பினார்களோ வாக்காளர்- ஆதார் இணைப்பு விவகாரத்திலும் பீதியை கிளப்புகின்றனர் என கூறிய அவர்,

மேலும் நாட்டு பிரஜையாக இல்லாமல் வேலி தாண்டி வந்தவர்களை எதற்கு வாக்காளர் ஆக்க வேண்டும். வேலியை தாண்டி வந்தவர்களை வேலி தாண்டி விரட்டி விட வேண்டும். நாட்டை பற்றி கவலை இல்லாதவர்கள். ஒட்டு பற்றி மட்டும் கவலைப்பட கூடியவர்கள். பீதி கிளப்ப வேண்டாம். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு எதிர்க்கும் கட்சிகளை மக்கள் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்றார்.  

தொடர்ந்து பேசிய அவர், உண்மையை பேசினாலே கொந்தளிக்கின்றனர். ஜனநாயகத்தில் சீமானும் செருப்பை காட்டி இருக்க வேண்டாம். சீமான் ஆட்களை அடித்தது தவறு. வன்முறை என்பது இருமுனை கத்தி. யாருக்கு எதிராக பயன்படுத்தினாலும், வேறு இடத்தில் உனக்கு பயன்படும். திமுக மேடை ஏறி அடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். எதிராளி திருப்பி அடித்தால் என்னவாகும். இரு சம்பவங்களும் தவறு தான். இவ்வாறு அவர் கூறினார்.