”கலைஞர் நூற்றாண்டு விழா அனைவரும் கொண்டாடும் விழாவாக அமைய வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

”கலைஞர் நூற்றாண்டு விழா அனைவரும் கொண்டாடும் விழாவாக அமைய வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா அமைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா வருகிற ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெற உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : தஞ்சாவூரில் மது அருந்தி இருவர் உயிரிழப்பு...காரணத்தை அறிவித்த ஆட்சியா்...!

பின்னர் பேசிய முதலமைச்சர், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து கொண்டாடும் விழாவாக கலைஞர் நூற்றாண்டு விழா அமைய வேண்டும் என்றார். இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கலைஞர் நூற்றாண்டு விழா குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.