ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர் என்றாலே விபச்சார தொழில் புரியும் இடமாக தான் பார்ப்பீங்களா....காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்...

ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர் என்றாலே விபச்சார தொழில் புரியும் இடம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர் என்றாலே விபச்சார தொழில் புரியும் இடமாக தான் பார்ப்பீங்களா....காவல்துறைக்கு  உயர்நீதிமன்றம் கண்டனம்...

சென்னையில் உள்ள ஸ்பா உரிமையாளர் ஒருவர், காவல்துறையினர் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், ஆதாரமில்லாமல் சோதனை மேற்க்கொள்வதாகவும் மனு தாக்கல் செய்தார்.மேலும் தங்களது கிளையில், பாலியல் தொழில் நடைபெறுவதாக கூறி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான தாம்பரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரினர். மேலும் காவல்துறையினர் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால், அது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மிரட்டும் நோக்கில் செயல்படக் கூடாது என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.