குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு....! 4 வது நாளாக தொடரும் தடை...!

குற்றாலம் மெயின் அருவி - ஐந்தருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் இன்று 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை நீடிப்பு...

குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு....! 4 வது நாளாக தொடரும் தடை...!

தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் குற்றாலமும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்துவரும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலமாகும். அப்போது சாரலுடன் கூடிய வெயில் மழையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளித்து மகிழும் வகையில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் இங்கு வருகை தருவார்கள்.

இந்த ஆண்டு ஒரு மாதம் காலதாமதமாக சீசன் துவங்கிய நிலையில் காலம் கடந்தும் சீசன் நீடித்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 6 ஆம் தேதி மாலை 3 மணி முதல் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 4வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் குளிப்பதற்காக வருகைதரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் செல்பி மட்டும் எடுத்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.