"கொரானாவுக்கு பின் மாரடைப்பு அதிகரிப்பு" சௌமியா சுவாமிநாதன் பகிர்!!

"கொரானாவுக்கு பின் மாரடைப்பு அதிகரிப்பு" சௌமியா சுவாமிநாதன் பகிர்!!

கொரோனாவுக்கு பின்னா் இளம் தலைமுறையினரிடையே சர்க்கரை நோய், மற்றும் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தொிவித்துள்ளாா். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்பொழுது பேசிய சௌமியா சுவாமிநாதன், குளோபல் வார்மிங் காலம் போய் தற்போது குளோபல் மெல்டிங் பிரச்சனையை உலக நாடுகள் சந்தித்து வருவதாகவும், உண்ணும் உணவு முதல் சுவாசிக்கும் காற்று வரை அனைத்தும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருவதாகவும் , இதனால் ஆண் மற்றும் பெண்களிடையே கருவுறாமை விகிதம் உலக அளவில் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், "இயற்கையை அழிக்கக்கூடிய செயல்பாடுகளை மனித குலம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் வேதியல் உரங்கள் மண்வளத்தையும் மனித குலத்தையும் பாதித்து வருகிறது. பெருகி வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு வாழ்க்கையில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை வழங்கி வருகிறது" என சுட்டி காட்டியுள்ளார்.

மேலும், "கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், புது விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதிப்புகள் மனித குலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கும். அதே போல், கொரோனாவுக்கு பிறகு இளம் தலைமுறையினரிடையே உலக அளவில் சர்க்கரை நோய், மற்றும் மாரடைப்பு அதிகரித்திருக்கிறது" எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் சேர்ந்து நடைபயிற்சி மேற்கொண்ட 300க்கும் மேற்பட்டோர்!!