தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில்,

தமிழகத்தில் இன்று நடைபெற்ற 9 மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைப்பெற்றது எனவும் 23 இடங்களில் மழை பொழி இருந்த போதிலும் இன்று இதுவரை 83,693 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

டெங்கு பாதிப்பு நேற்று வரை 450 ஆக இருந்ததாக தெரிவித்த அவர், கடந்த இரண்டு நாட்களாக டெங்கு பாதிப்பு  உயர்ந்துள்ளது என குறிப்பிட்டார். காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி மற்றும் சேலம்  ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களை விட டெங்கு பாதிப்பு இன்று உயர்ந்துள்ளது என்றும் 532 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.