" வரி ஏய்ப்பு " நகை மற்றும் துணிக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!

வரி ஏய்ப்பு தொடர்பாக புதுச்சேரி உள்ள நகைக்கடை மற்றும் துணிக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

" வரி ஏய்ப்பு " நகை மற்றும் துணிக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!

புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடைகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகர் எழுந்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடை மற்றும் துணிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.  சென்னையில் இருந்து இன்று புதுச்சேரிக்கு வந்த 50க்கும் மேற்பட்ட  வருமானவரித் துறை அதிகாரிகள், நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகளில் சோதனை நடத்தி பவேறு  ஆவணங்களையும் சரிபார்த்து வருகின்றனர்.

இதேபோன்று, வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள பிரபல துணிக்கடையில் கடந்த மூன்று மணி நேரமாக பத்துக்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.