கலைஞர் கோட்ட திறப்பு விழா: முதலமைச்சர் ஆய்வு!

கலைஞர் கோட்ட திறப்பு விழா: முதலமைச்சர் ஆய்வு!

திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘கலைஞா் கோட்டம்’ மற்றும் முத்துவேலா் நூலகம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : தொடர் மழையால் குளிர்ந்த தமிழ்நாடு...வெப்பம் தணிந்தும் மக்கள் அவதி...!

இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 

இதனிடையே திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மக்களின் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முன்னதாக திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை தரப்பில் அணுவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.