ஊழல் பணத்தை அடுக்கி வைத்தால் நிலவுக்கே பாதை போடலாம்...! - ஜெயக்குமார்.

ஊழல் பணத்தை  அடுக்கி வைத்தால் நிலவுக்கே பாதை போடலாம்...!   - ஜெயக்குமார்.

திமுக ஊழல் செய்த மொத்த தொகையையும் பறிமுதல் செய்து அரசு கஜானவிற்கு கொண்டு வந்தால் நாட்டின் பாதி கடன் அடைந்து விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர்.  ஜெயக்குமார்  திறந்து வைத்தார். மற்றும்  மாதவரம் மூர்த்தி உடனிருந்தார். இருவரும், ஏழை எளியவர்களுக்கு இளநீர் குளிர்பானங்கள் வழங்கினர்.  

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  "திமுக ஊழல் செய்ததாக கூறப்படும் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடியை 100 ரூபாயாக அடுக்கினால் நிலாவிற்கு செல்லும் தொலைவில் மூன்றில் ஒரு பங்கு தூரம் வரும்.  திமுக ஊழல் பட்டியலில் உள்ள பணத்தை சிபிஐ வருமானவரித்துறை அமலாக்கத்துறையினர் சோதனை செய்து பறிமுதல் செய்தால் அந்த பணத்தை வைத்து  நாட்டில் உள்ள பாதி கடனை அடைத்து விடலாம்",  என தெரிவித்தார்.

 இதையும் படிக்க:... கள்ளக்குறிச்சியில் கபடி போட்டி...! தலைவர்கள் பெயரில் கோப்பைகள்...!

மேலும் பேசிய அவர், "திமுக ஊழல் நிறைந்த கட்சி என்பது உலகத்துக்கே தெரியும் ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். எங்களுக்கு மடியில் கணம் இல்லை, வழியில் பயம் இல்லை, சிபிஐ குறித்த பயம் இல்லை வருமான வரித்துறை குறித்த பயம் இல்லை" எனவும் குறிப்பிட்டார்.  

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக பெயரை குறிப்பிட்டு அண்ணாமலை பேசினால் அது குறித்து நான் பேசுகிறேன். ஆனால், அண்ணாமலை அதிமுகவின் பெயரை குறிப்பிடவில்லை' என தெரிவித்தார். மேலும் எந்த பட்டியலை வெளியிட்டாலும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். யாரை பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எந்த பூச்சாண்டிக்கும் அதிமுக பயப்படாது எனவும்  தெரிவித்தார்.

அதனையடுத்து, "எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி நாங்கள் தான் எத்தனை இடங்கள் குடிப்பது குறித்து முடிவெடுப்போம். மேலும், சன் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளை வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் ஸ்டாலின் மருமகன் உள்ளிட்டவர்களின் பட்டியலை தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்" எனத் தெரிவித்தார். 

இதையும் படிக்க:.... தமிழ்நாட்டில் 11% டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை....!!!