"எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது"... லிஸ்ட் இருக்கா? நாளை விவாதம் - அமைச்சர் துரைமுருகன் விட்ட சவால்.. ஏற்குமா அதிமுக?

சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து விவாவித்த  தயாரா என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

"எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது"... லிஸ்ட் இருக்கா? நாளை விவாதம் - அமைச்சர் துரைமுருகன் விட்ட சவால்.. ஏற்குமா அதிமுக?

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய விவாதத்தின் போது, 110 விதியின் கீழ்  அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றி காரசார விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு பேருமே எதுவுமே செய்யவில்லை என்ற சந்தேகம் ஏற்படும் என கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.

மேலும் 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்தவை நிறைவேற்றப்பட்டுவிட்டதா என கேட்டால் அதிமுகவால் பதிலளிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி. வேலுமணி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றியதை புள்ளி விவரமாக நினைவூட்டினார்.  இதற்கு பதிலடி கொடுத்த துரைமுருகன், இதுவரை எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பாக நாளை விவாதம் வைத்து கொள்ளலாமா என சவால் விடுத்தார்.
 
அதற்குள்ளாக கேள்விக்கணையை தொடங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி -  2016ம் ஆண்டு தேர்தலில், ‘யூத் பிரிகேட்’ திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், அதுசார்ந்த பட்டியலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

அப்போது பேசிய எஸ். பி வேலுமணி,  அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 90 சதவீதம் வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 2011 தேர்தலில் அதிமுகவின் முக்கிய வாக்குறுதியே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது தான் என்றார். 

அதன்படி சென்னையில் 10 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது என்றும், தமிழகம் முழுவதும் இது செயல்படுத்தப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.  தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கடந்த  ஆகஸ்ட் மாதம் இந்த அறிக்கையை இதே அவையில் சமர்ப்பித்ததாகவும்

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை,  சரியில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் எனவும் அதுபற்றி நாளை விவாதிக்கலாமா? என பி.டி.ஆர் சவால் விடுத்ததால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.