மின்வாரியத்துறைக்கு மட்டும் எப்படி கடனில் இருந்தாலும் நிதி? - சுப்பிரமணியபிள்ளை கேள்வி

போக்குவரத்து துறை 48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குதாக கூறும் தமிழக அரசு, மின்வாரியத் துறைக்கு மட்டும் எப்படி கடனில் இருந்தும் நிதி ஒதுக்குகிறது நாகர்கோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஹெச்.எம்.எஸ் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியபிள்ளை கேள்வி எழுப்பினார்.
      
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  அரசு போக்குவரத்து கழகம் முன்பு இன்று, சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் பேரவையும், ஹச்.எம்.எஸ் தொழிற்சங்கமும்  இணைந்து நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு பணிமனை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடத்தியது.
இதில் அரசு போக்குவரத்தை தனியார் மயமாக்குவதை கைவிட கோரியும்,ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு நிலுவையை சட்டப்படி உடனே வழங்க வேண்டும் நாகர்கோவில் மண்டல நிர்வாக சீர்கேடுகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் அடாவடி அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

மேலும் படிக்க | நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்

இதில் கலந்துகொண்ட ஹெச்.எம்.எஸ் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது " போக்குவரத்து தொழிலாளர்கள் பண பலன்களை கேட்டால் போக்குவரத்து கழகம் 48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் கூறுகிறார்.

மேலும் படிக்க | நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

மின்வாரியமும் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது ஆனால் அதற்காக அரசு மின்வாரியத்திற்கு பண ஒதுக்கவில்லையா? 
அரசு பொது போக்குவரத்து கழகம் என்பதே  கிராம மக்கள் பயனடைவது தான் அதன் முக்கிய குறிக்கோள் அதை விடுத்து போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறுவதை ஏற்க முடியாது என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறினார்.