வீரமங்கை வேலுநாச்சியாரால் வெட்டுப்பட்ட பெண்ணுக்கு கட்டப்பட்ட கோயிலின் வரலாறு இதோ!!!

வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்றினை அறியாதோர் எவருமில்லை. ஆனால் அவரால் ஒருவருக்கு கோவில் கட்டப்பட்ட வரலாற்றினை பலரும் அறியாததே,

வீரமங்கை வேலுநாச்சியாரால்  வெட்டுப்பட்ட பெண்ணுக்கு கட்டப்பட்ட கோயிலின் வரலாறு  இதோ!!!


 திசம்பர் 3 வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து ராஜ்பவன் மாளிகையில் அலங்கரிக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். 

சிவகங்கை என்றாலே வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்றினை அறியாதோர் எவருமில்லை. ஆனால் அவரால் ஒருவருக்கு கோவில் கட்டப்பட்ட வரலாற்றினை பலரும் அறியாததே,

வீரமங்கை வேலுநாச்சியாரின் கணவர் முத்து வடுகநாதர் ஆங்கிலர்கள் கொல்லப்பட்ட பின்பு  தன்னுடைய சீமையிலுள்ள மக்களை காப்பாற்றிட வேலுநாச்சியார் மருதுசகோதர்களின் உதவியோடு ஆங்கிலயர்களை போரிட்டு வெல்லவதற்கான செயல்திட்டங்களைத் தீட்டிக்கொண்டே  மறைமுகமாக சுற்றித்திரிந்தார்கள் அச்சமயம் சிவகங்கை அடுத்து வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும்  செல்லும்போது ஆங்கிலயர்கள் கண்ணில் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும்  பட்டதும் மூவரையும்  துறத்திக்கொண்டே வர  தனித்னியே வெவ்வெறு திசையில் செல்ல வேலுநாச்சியார் மட்டும் சிவகங்கை அடுத்த கொல்லங்குடி காட்டுப்பகுதிக்கு ஓடிச்செல்லும் பாதையில் மாடுமேற்க்கும் பெண்ணொருத்தியிடம் இந்த வழியே யாரேனும் தன்னைப்பற்றி கேட்டால் கூற .......

வந்தது ராணி வேலுநாச்சியார் என தெரிந்ததும் அந்த பெண்ணொருத்தி பேசுவறியாது நின்றாள்.

ஆங்கிலயர்கள் அப்பெண்ணிடம் பலமுறைக்கேட்டும் அவள் தனக்கு தெரியாது என கூறவும் அப்பெண்ணை வெட்டி வீசினார்கள் . இதனை பார்த்துக்கொண்டிருந்த வேலுநாச்சியார் அங்கிருந்து தப்பிச்சென்று சில வருடங்களுக்கு பிறகு ஆங்கிலயர்களிடமிருந்து சிவகங்கை சீமையே மீட்டதும் முதல் வேலையாக மறுபடியும் கொல்லங்குடி பகுதிக்கு வந்து அன்றைக்கு வெட்டுபட்டு இறந்த இந்த பெண்ணால் மட்டுமே சிவகங்கை சீமையும் இந்த மக்களையும் காப்பாற்றமுடிந்தது என கோவில் கட்டினார்  வீரமங்கை வேலுநாச்சியார்

அந்த பெண்ணின் பெயர் வெட்டுடையாள் , இன்றைக்கும் அந்த சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி ஊரில்  வெட்டுடையாள் காளியம்மனாக வழிப்படப்பட்டு வருகிறார்கள் .