"தமிழ்த் தேசியத்தின் எதிரி இந்தி தேசியம்; திராவிடம் என்பது திசைமாற்று வேலை" தொல்.திருமாவளவன்!

தமிழ் தேசியத்தின் எதிரியாக இந்தி தேசியமாக தான் இருக்க முடியுமே தவிர, திராவிட மாநிலங்களை எதிரிகளாக பார்ப்பது திசை மாற்றும் வேலை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தந்தை பெரியார் 145 வது பிறந்தநாளையொட்டி திராவிட விடுதலை கழகம் சார்பில் எது திராவிடம் எது சனாதனம் என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. சென்னை இராயப்பேட்டையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அப்போது விழா மேடையில் பேசிய தொல்.திருமாவளவன், திராவிடம் குறித்தும் பலர் குழப்பங்களை எழுப்பி வருவதாகவும்,சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான்  திராவிடம் என கூறினார். சமூக நீதிதிக்கான, சுதந்திரத்திற்கான திராவிடம் என்ற சொல்லை கருத்தியலாக பொருத்தி பார்ப்பது தான் சரியாக இருக்கும் என தெரிவித்தார்.

தமிழ்த் தேசியத்தின் எதிரியாக இந்தி தேசியமாக தான் இருக்க முடியுமே தவிர, திராவிட மாநிலங்களை எதிரிகளாக பார்ப்பது திசை மாற்றும் வேலை என கூறினார். உயர்வு தாழ்வு, தீண்டாமை, குலத்தொழில், மற்றும் அகமணமுறை உள்ளிட்டவைகள் சனதானத்தில் என்றும் மாறாதது என தெரிவித்த அவர், சாதி மாறி திருமணம் செய்தால் கொலை செய்யலாம் என்பது தான் மனுதர்மம் என தெரிவித்தார்

சனதானத்தை எதிர்த்து போர்கொடி தூக்கியதது தான் திராவிடம் என்றும்  மகாபாரதம், இராமயணம் கதைகள் மூலமாக குல தர்மத்தை மீறினால் தண்டனை கிடைக்கும் என்பதை பாமர மக்கள் மத்தியிலும்  சனதானத்தை கொண்டு சேர்த்து இருப்பதாக தெரிவித்தார். சனதான தர்மம் அரசியல் அமைப்பு சட்டமாக இயங்குவதாகவும்,தேர்தல் களத்தில் மட்டுமே இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஆட்சி நடத்துவதாக கூறினார். இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகளில் அதிகமாக பிரமாண சமுதாயத்தை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளதாகவும், பிற சாதியினர் சொற்ப அளவில் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகளில்  பிற சாதியினர் சொற்ப அளவில் இருப்பதற்க்கு எதிராக பாமக  போன்ற கட்சியினர் போராடாமல்  இருப்பதாக கூறினார்.

பிற்படுத்தப்பட்ட மக்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மோத செய்வதே சனதானத்தின் யுக்தி என தெரிவித்த அவர், சமஸ்கிருதத்திற்க்கு தனி நிலப்பரப்பு இல்லாததால் பாரதம் என பெயர் மாற்றி நாடு முழுவதும் தனதாக மாற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா