கனமழை எதிரொலி; கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் முழுவதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது.நாகர்கோவில்,பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.இந்த நிலையில் இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. 

நாகர்கோவில் பகுதியில் பெய்த கனமழை காரணமாக செட்டிகுளம் கோட்டார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையாக அவதி அடைந்தனர் மேலும் மழைநீர் வடிகால் ஓடைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதனிடையே  கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என்.ஸ்ரீதர், இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்க: “மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!