முதலமைச்சர் ஸ்டாலின் எடப்பாடியை போல் இருக்கவேண்டுமென ஆளுநர் விரும்புகிறார் - கே.எஸ்.அழகிரி!

முதலமைச்சர் ஸ்டாலின் எடப்பாடியை போல் இருக்கவேண்டுமென ஆளுநர் விரும்புகிறார் - கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி போல் இருக்க வேண்டுமென ஆளுநர் விரும்புவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் ஆனந்தகுமார் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட கே.எஸ் அழகிரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா? - அன்புமணி கேள்வி!

அப்போது பேசிய அவரிடம், திராவிட கொள்கை காலாவதியான கொள்கை என தமிழ்நாடு ஆளுநர் கூறியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்எஸ்எஸ் தத்துவத்தின் கீழ் செயல்படக் கூடியவர் என்றும், அவர் ஆளுநராக இல்லாமல் தனி மனித ஆர்.என். ரவியாக இருந்தால் எந்த ஒரு கொள்கையையும் பின்பற்றலாம் எனவும் கூறினார். ஆனால், ஆளுநராக பின்பற்றினால் அதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி போல் இருக்க வேண்டுமென ஆளுநர் விரும்புவதாகவும், அப்படி இல்லாதது தான் ஆளுநருக்கு கோபமாக மாறியிருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.