"திராவிட மாடல் ஒரு இத்துப்போன மாடல் தான்....!" - சீமான் ஆவேசம்.

"திராவிட மாடல் ஒரு  இத்துப்போன மாடல் தான்....!"  - சீமான் ஆவேசம்.

அயோத்திதாசர் 109வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் அவரது சிலைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழகத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த பெருமையும் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் வரலாற்று போராளிகளின் பெயர்களை மறைத்து இந்த திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது இன்றும், தொடர்ந்து தமிழர்களின் பெருமையும் தனிச்சிறப்பும் திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

There is no Dravidian governance model. It's a political slogan' | India  News - Times of India

தொடர்ந்து, சமாதி கட்டுவது; பேனா வைப்பது; பள்ளிக்கூடங்களை சீரமைக்க மக்களிடம் கையேந்துவது; இதுதான் திராவிட மாடல் என்றும்,  திராவிட மாடல் ஒரு இத்துப்போன மாடல் தான்; கவர்னர் சொல்வதை  ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் வெளியாகி உள்ள கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறோம்,ஆனால், எதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும், சிறுபான்மை மக்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அவர்களுக்கு எதிராக வெளியான படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.  அதோடு, திரையரங்குகளின் முன்னால் போராடினால் தமிழக அரசால் என்ன செய்ய முடியும்...? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க      }  "கலைஞர் நினைவாக பேனா வைப்பது மனதளவில் கூட வேண்டாம்...."!

மேலும், பிஜேபியின் வளர்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது எனவும், ஒன்றுமே இல்லாத பிஜேபியை ஒற்றுமையாக்கியது திமுக தான் என்றும் கூறினார். அதோடு, ஹச். ராஜா, லட்சுமணன் போன்றவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியதும்  திமுக தான் என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து, தொழிலாளர் நலச் சட்டத்தை அவசர அவசரமாக திமுக கொண்டு வந்ததன் காரணம் என்ன?... என்றும்,  பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் கூட கொண்டு வராத நிலையில், அவசர அவசரமாக  அந்த சட்டத்தைக் கொண்டு வந்து, பின்னர் திரும்ப பெற்றது ஏன்?,.. என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க      }  ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமனம்...! சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்...!!