ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் - அதிமுகவை பாஜக விழுங்குகிறது- பாசிசத்தை சூட்டிகாட்டும் திருமாவளவன்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு கோவில் மனைகளில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் - அதிமுகவை பாஜக விழுங்குகிறது- பாசிசத்தை சூட்டிகாட்டும் திருமாவளவன்

தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் படிக்க |  ஆட்சி எப்படி நடத்த கூடாது என்பதற்கு உதாரணம் எடப்பாடி- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு

மனைப்பட்டா வழங்க வேண்டும்

2016 ஆம் ஆண்டு போடப்பட்ட அரசாணை 28 ரத்து செய்யப்பட வேண்டும். 1998 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தபடி பகுதி முறையில் வாடகை வசூலிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல கோவில் மனையில் நீண்ட காலமாக வசித்து வருபவர்களுக்கு அவரவர் வசிக்கும் இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும். தற்போதைய தலைமைச் செயலாலர் இறையன்பு தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை உடனடியாக வெளியிட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | ஒரு கோடியை தாண்டிய இணைப்பு.. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

தமிழக அரசு கோவில் மனைகளில் குடியிருப்போரின் நலனை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன்.

வாடகை வசூல் செய்கிறோம் என்ற பெயரில் இவர்களிடம் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொள்ளும் போக்கை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். சில இடங்களில் கடைகளை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் அவற்றை இடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.சில நேரங்களில் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவார்கள். வீடுகளை இடிக்குமாறு ஆட்சியாளர்கள் யாரும் உத்தரவு பிறப்பிப்பதில்லை. சரியாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காக ஒரு சில அதிகாரிகள் இதுபோன்று செயல்படுகிறார்கள்.

ஆளுநர் ஆர் எஸ் எஸ் தொண்டர் :

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்க கூடிய ஆர்.என்.ரவி . அரசின் சார்பில் மசோதாக்கல் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதை தொடர்ந்தும். ஆளுநர் செல்லக்கூடிய இடங்களுக்கு எல்லாம் நீட் ஆதரவு, தேசிய கல்விக்கொள்கை போன்றவற்றை ஆதரிக்கும் நோக்கில் பேசி வருவது நாம அறிந்த ஒன்றே.  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆளுநர் ஆர்.ரவியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் ஆளுநரை திரும்ப பெறக்கோரியும் குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.  

பல அரசியல் தலைவர்களும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்துவரும் நிலையில் விசிகவின் தலைவர் திருமாவளவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் வருகிறார்.அரசியல் சாசனத்தின்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர் எஸ் எஸ் தொண்டராக செயல்படுகிறார்.அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட பாஜக விழுங்குகிறது என்று சொல்லலாம். அதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.