"மருந்து தட்டுப்பாடுகளை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..." - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

"மருந்து தட்டுப்பாடுகளை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..."  - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்த பி.யூ. சின்னப்பாவின் 106வது பிறந்தநாள் விழா இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட பி யு சின்னப்பாவின் நினைவிடம் புதுக்கோட்டை சின்னப்பா நகரில் உள்ளது இங்கு அவரது ரசிகர்கள் அவரது நினைவிடத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து, பி.யு. சின்னப்பாவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தனி ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதிமுக சார்பில் பேசியுள்ளதாகவும்,  அடுத்த  சட்டமன்ற கூட்டத்தொடரில் இதனை மீண்டும் வலியுறுத்தப்போவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் விபத்து அதிகம் நடக்கக்கூடிய சென்னை புதுக்கோட்டை உள்ளிட்ட 11  தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவசர கால சிகிச்சை மையங்கள் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்றும்,  அதனை மூடுவதற்கு தற்போது அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வருவதாகவும், இது  கண்டனத்துக்குரியது எனவும் கூறினார்.

இதையும் படிக்க     }   "கலைஞர் நினைவாக பேனா வைப்பது மனதளவில் கூட வேண்டாம்...."!

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகளை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு குளோபல் டெண்டர் விடப்பட்டு மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, லோக்கல் சந்தையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மருத்துவத்துறையால் என்.ஓ.சி. வழங்கப்பட்டு வருகிறது என்றும்,  இதனால் நோயாளிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது எனவும் கூறினார். மேலும், தற்போது சீதோஷ நிலை மாறி மாறி வருவதால் மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லாத வகையில், அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

அதோடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம், முத்துலட்சுமி ரெட்டி உதவித்தொகை ஆகியவை காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது என்றும், அவை காலதாமதம் இன்றி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இதையும் படிக்க     }   சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடல்” உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.கணேசன்!