தஞ்சையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்...

தஞ்சையில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 43 ஆயிரம் பயனாளிகளுக்கு 237 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

தஞ்சையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் 11 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் முழு உருவச்சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்ததாக தெரிவித்துள்ளார். அவை வெறும் சிலைகள் அல்ல என்றும், தமிழ்ச் சமூகத்தின் கலங்கரை விளக்கங்கள் எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் அவர், 43 ஆயிரம் பயனாளிகளுக்கு 237 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் 98 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் இரண்டாம் உலக போர் நினைவுச் சின்னமான மணிக்கூண்டு உடன் கூடிய ராஜப்பா பூங்கா மற்றும் கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சரபோஜி மார்க்கெட் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.