குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம்...! கிராம மக்கள் அவதி..!

திருவாரூர் மாவட்டத்தின் நீடாமங்கலம் அருகே நூற்றுக்கணக்கான வீடுகளின் பின்புறமாக தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் கிராம மக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம்...!  கிராம மக்கள் அவதி..!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கன மழை பெய்தது.  இதனால் பாசன ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்தன. இந்நிலையில் நீடாமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டு கிராமத்தில் உள்ள பாசன வாய்க்கால் ஒன்றில் பெருக்கெடுத்த தண்ணீர், முறையாக தூர்வாராத காரணத்தால் பாய வழியின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தன. 

மேலும் வாய்க்காலின் மேற்பகுதியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் குடியிருப்புகள் முழுவதுமாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர், நீடாமங்கலம் வட்டாட்சியர் ஆகியோருக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறுகின்றனர். இதனால் கீழப்பட்டு கிராமமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்துவருகின்றனர்.  இதுசம்மந்தமாக தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.