ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு...  இணையம் மூலம் கண்காணிக்கிறது தேர்தல் ஆணையம்...

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி இன்று நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவை இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு...  இணையம் மூலம் கண்காணிக்கிறது தேர்தல் ஆணையம்...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றும், வரும் 9 ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் மொத்தம் 80 ஆயிரத்து 819 போ் தோ்தல் களத்தில் உள்ளனா். இவா்களுக்கு ஆதரவாகவும் அரசியல் கட்சித் தலைவா்களும், தொண்டா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். 

9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் உள்ள 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில், முதற்கட்டமாக ஏழாயிரத்து 921 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இதில், கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 முதல் 6 மணி வரை பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இன்று நடைபெறும் வாக்குப்பதிவை கண்காணிக்க கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளையும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேவைப்படும் போது அல்லது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அங்குள்ள நிலையை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தே தெரிந்து கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.