பா.ஜ.க.வின் தவறான கொள்கைகள் சரித்திரத்தின் குப்பைக்கூடைகளில் வீசப்படும்... கே.எஸ்.அழகிரி ஆவேசம்...

சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் தவறான கொள்கைகள் சரித்திரத்தின் குப்பைக்கூடைகளில் வீசப்படும்... கே.எஸ்.அழகிரி ஆவேசம்...

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது..

அதனையொட்டி தமிழகம் முழுவதும் மதசார்பற்ற மத்திய  பாஜக அரசின் மக்கள் விரோதமான பெட்ரோல் டீசல்,சமயல் எரிவாயு விலை உயர்வு,புதிய வேளாண் திருத்த  சட்டம்,குடியுரிமை திருத்த சட்டம்,பெகாசுஸ் உளவு பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பாக தமிழகம் முழுவதும்   வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் இன்று நடைபெற்றது..

இதனையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் கருப்பு கொடி ஏற்றும்  போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கருப்புகொடி ஏற்றி கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர்,

புதிய வேளாண் திருத்த சட்டம் ,குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை மனதார பாரட்டுன்கின்றேன் இதுதான் மக்கள் அரசு இன்றைய போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல இந்திய வரலாற்றை காப்பாற்றுவதற்கான போராட்டம்.

காங்கிரஸ் முன்னாள் பாரத பிரதமர் நேரு இந்தியா முழுவதும் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி பல லட்சம் கோடி வருமானம் ஈட்டினார்.இந்தியாவில் ஜனநாயகத்தையும் சோசியலியத்தையும் கொண்டுவந்தவர் நேரு ஏகாதிய பத்தியத்திற்கு எதிரான கருவியாக காங்கிரஸ் கட்சி இருந்தது.

தற்போது பாஜக பொதுத்துறை நிருவனங்களை விற்பனை செய்து வருகின்றார். நாட்டிற்கு வருமானம் வராத நிறுவனங்களை தான் காங்கிரஸ் கட்சி விற்பனை செய்தது. ஆனால் பாஜக வருமானம் ஈட்டிவருகின்ற ரயில்வே துறை,காப்பீட்டு நிறுவனம்,நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை விற்பனை செய்து வருகின்றது.

விரைவில் மக்கள் விரோத பா ஜ க கொண்டுவந்த  தவறான கொள்கைகள் அனைத்தும் தூக்கி வீசப்படும் எனவும் பேசினார்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு,நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார்,சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா,மாநில துணை தலைவர்கள் கோபன்னா,பொன் கிருஷ்ணமூர்த்தி, இமையா கக்கன், சுமதி அன்பரசு ,சென்னை மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்எஸ் திரவியம், ரஞ்சன் குமார், டில்லிபாபு, முத்தழகன், அடையாறு துரை, நாஞ்சில் பிரசாத், மாநில செயலாளர்கள் முனிவர் கணேஷ் கடல் தமிழ்வாணன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்ததன் படி இன்று தமிழகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது தலைமையில் தமிழகம் முழுவதும் மாபெரும் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

இந்தியாவின் பொருளாதாரம் ஜனநாயக சோசியலிசம் என்று சொல்லக்கூடிய ஒரு கலப்பு பொருளாதாரம். இதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டும் உண்டு .ஆனால் தற்போது பொதுத் துறைகளை திட்டமிட்டு அளிக்கிறார்கள்.லாபகரமாக செயல்படும் பொழுது துறைகளை விற்கிறார்கள்.

தனியார் துறைகளில் கூட இவர்களுக்கு வேண்டாதவர்களை அழிக்கின்றார்கள். உதாரணத்திற்கு ஏர்செல் ஐ ஒழித்தார்கள்.. ஏர்டெல் தற்போது அழிக்க திட்டம் தீட்டியுள்ளார்கள் .இவர்களது நோக்கம் ஜியோ வை மட்டுமே 130 கோடி மக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கமாக உள்ளது

ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் அதனை எதிர்ப்போம் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்வோம். சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் இன்று பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும் என்றார். நமது கருத்துக்களை தீர்மானம் மூலமாக மத்திய அரசுக்கு வழங்க இருக்கின்றோம் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளோம் மத்திய அரசு இதனை பரிசீலிக்கவில்லை என்றால் தமிழகத்தில் வேறு நிலையை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.