திருச்சி விமான நிலையத்தில் போலி ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளோடு வந்ததால் பரபரப்பு...

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த 3 பேர், போலியான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் போலி ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளோடு வந்ததால் பரபரப்பு...

70க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவிள்ளதால், பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளன. ஆனால் இந்தியாவிற்குள் தொடர்ந்து விமான சேவைகள் செயல்பாட்டில் இருந்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் 3 பேர், போலியான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இதற்கு முன்பு பயணம் செய்த பயணிகளின் பரிசோதனை முடிவுகளை, போலியாக தங்களுடைய பெயரில் மாற்றி அமைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த நான்கு மணி நேரத்திற்கு பிறகு, அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.