ஈவேரா அரசு கல்லூரி அங்கீகாரம் ரத்து - தமிழக அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

ஈவேரா அரசு கல்லூரி அங்கீகாரம் ரத்து - தமிழக அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

திருச்சி ஈவெரா அரசு கல்லூரியில் தன்னாட்சி அங்கீகாரத்தை 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் கல்லூரி நிர்வாகம் புதுப்பிக்காததால் பல்கலைக்கழக மானிய குழு ஈவேரா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது, இதனால் கல்லூரியில் பயிலும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இது தொடர்பாக ஈவேரா கல்லூரியின் முதல்வர் விஜயலட்சுமி கூறுகையில்... அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருப்பதாகவும், கொரோனா காலம் அதனைத் தொடர்ந்து பல்வேறு பணி பளுவின் காரணமாக புதுப்பிக்க தாமதம் ஆகிவிட்டது என்றும், ரத்து செய்யப்பட்ட அங்கீகாரம் திரும்ப பெற 6மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஸ்டெர்லைட் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு ம.தி.மு.க கடும் கண்டனம்

அங்கீகாரம் ரத்து தொடர்பாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.... அரசு கல்லூரியில் பயிலும் விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவார்கள் என்றும், கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரத்தை பதிவு செய்யக்கூட அலட்சியமாக கல்லூரி நிர்வாகம் இருக்கும் பட்சத்தில் என்ன வேலை செய்கிறார்கள் என்றுகூட தெரியவில்லை.

இயக்குனரகத்தை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை திரும்பபெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க | முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட பள்ளி: மாணவர்கள் தவிப்பு!

மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ததை தமிழக அரசு வேடிக்கை பார்த்தது போல, தற்போதும் அரசு கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினாலே அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.