ஈரோடு (கி) இடைத்தேர்தலில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது...!

ஈரோடு (கி) இடைத்தேர்தலில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கியது...!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பதிவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று தபால் வாக்குப் பதிவு தொடங்கியது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு வாங்கும் பணியினை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 321 முதியவர்கள் மற்றும் 31 மாற்றுத் திறனாளிகளிடம் வாக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த தபால் வாக்குப் பதிவு 2 நாட்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க : தமிழைத் தேடி...பயணத்திற்கு ஊடக நண்பர்கள் ஆதரவுக்கோரி இராமதாசு அறிக்கை..!

முன்னதாக,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பணிமனைகளை அமைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனுமதியின்றி செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, திமுகவின் 10 பணிமனைகளுக்கும், அதிமுகவின் 4 பணிமனைகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.