மின்கட்டணம் உயர்வு குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.. முக்கிய தகவல்!!

மின்கட்டணத்திற்கான மானியத்தை கழித்துவிட்டு கட்டணம் செலுத்தினால் போதும் என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மின்கட்டணம் உயர்வு குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.. முக்கிய தகவல்!!

280 அரங்குகள்: புத்தக திருவிழா:

கோவை கொடிசியா தொழில் வளாகத்தில் பத்து நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழா நேற்று துவங்கியது. மொத்தம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவிழாவில்,  200க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இதில் தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதி, அப்துல் கலாம்,  திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜி  விளக்கம்:

வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள அதிமுக , பாஜகவின் செயல் கண்டிக்கதக்கது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த மின்சார உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மின்கட்டணத்திற்கான மானியத்தை கழித்துவிட்டு கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் தெரிவித்தார்.