1 லட்சத்து 69 லட்சம் பேர் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரவு 9 மணி வரை ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.

1 லட்சத்து 69 லட்சம் பேர் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா காலமானதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம்தமிழர் கட்சியின் மேகனா என்பவர் உட்பட 77 பேர் போட்டியிட்டனர். 

இதையடுத்து ஈரோட்டில் 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பெரும்பாலான இடங்களில் 4 மணிக்கும், ஒருசில இடங்களில் 6 மணிக்கும் நிறைவடைந்தது. இதில் சில தொகுதிகளில் 4 மணிக்குள் வாக்களித்துவிட வேண்டும் என்று வாக்காளர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் படிக்க | நிறைவடைந்த ஈரோடு வாக்குப்பதிவு.... பதிவான வாக்குகள் என்ன?!!

இதனிடையே ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. நேரம் ஆன போதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதன்படி, இந்த இடைத்தேர்தலில் 74. 69 சதவீத வாக்குகள் பதிவாகயுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதில், ஆண்கள்  82 ஆயிரத்து 21 பேரும், பெண்கள்  87 ஆயிரத்து 907 பேரும், திருநர் சமூகத்தினர்  17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 69 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | ”இந்த மதத்தில் மதவெறி இல்லை எனவும் எதிரிகளை மட்டுமே உருவாக்கும் கடந்த காலத்தை தோண்டி எடுக்காதீர்கள்...”உச்சநீதிமன்றம்!!!

இதையடுத்து  அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகளுக்கு  சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள  வாக்கு  எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிட்டதக்கது. 

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!