ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 70 புள்ளி 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அதேசமயம், வேட்பாளர்களும் மக்களோடு மக்களாக இணைந்து வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குபதிவில், காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 10 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 27 புள்ளி 89 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44 புள்ளி 56 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59 புள்ளி 28 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் ஆண்கள் 77,183 பேர், பெண்கள் 83,407 பேர், மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் என மொத்தம் 1,60,603 பேர் இதுவரை வாக்களித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.