படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது அவசியம்.... ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி, கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று மனு அளித்தனர்.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது அவசியம்.... ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

தூத்துக்குடியில் மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி பாத்திமா நகர், இனிகோ நகர், லூர்தம்மாள் புரம், திரேஸ்புரம், லயன்ஸ் டவுன், அலங்கார தட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து மேரி என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் படித்த இளைஞர்கள் வெளிமாநிலத்தில்  வேலை பாத்துக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் இருக்கும் ஆலைகளை மூடிவிட்டு வேலை இல்லை என்று சொன்னால் எப்படி வேலை கிடைக்கும் என்றார்.

தமிழக அரசால் எல்லா மக்களுக்கு வேலை கொடுக்க முடியாது, ஆகவே இது போன்ற பெரிய தொழிற்சாலைகள் தான் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும், அதனால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வேண்டும் என்றார்.


அதேபோல் பண்டாரம்பட்டியை சார்ந்த சுப்புலட்சுமி கூறும்போது, எங்கள் கிராமத்தில் 3ஆயிரம் மக்கள் வசித்து வருகிறோம் என்றும் கிராமத்தில் உள்ள 200 இளைஞர்கள் ஸ்டெர்லைட் ஆலை மூலம் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆலை மூடி கிடைப்பதால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்களும் அவர்களை சேர்ந்த குடும்பங்களும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என கூறினார்.

மேலும் மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கு ஸ்டெர்லைட் வேதாந்தா சமுதாய வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் மூலம் 500 குடும்பங்கள் பயன்பட்டு வந்தன. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடி கிடப்பதால் இந்த திட்டத்தில் பயன் அடைந்து அனைவரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

எங்கள் கிராமத்தில் உள்ள 500 மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலை வழங்கும் கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் பெற்று பயனடைந்து வருகிறார்கள் என்றும் இப்படி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எங்கள் கிராம மக்கள் அனைவரும் உள்ளனர். எனவே எங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும்  இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.