கொரோனா- விலிருந்து குணமடைந்து வீடுதிரும்பினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...!

கொரோனா- விலிருந்து குணமடைந்து வீடுதிரும்பினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...!

கொரோனா -வுக்கு சிகிச்சை பெற்று வந்த  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  குணமடைந்து இன்று  வீடு திரும்பினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு  கிழக்கு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான  ஈ.வி.கே. எஸ்  இளங்கோவன், லேசான மார்பு தொற்று காரணமாக, மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 73 ஆகிறது. மேலும் அவர் கொரோனா  தோற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில் அவர்  கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று கொரோனா தொற்றிலிருந்து அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த தகவலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.