சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்...

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்...

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் புதிய தலைமை நீதிபதியாக, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொறுப்பேற்கும் வரை, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு குறித்த அறிவிப்பை, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.