காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல நடவடிக்கை!!

காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல நடவடிக்கை!!

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெறும் 7 வது ஆசிய ஆக்கி ஆடவர் சேம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை வேலூர் வந்து அடைந்தது. இதனை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  பொதுமக்களுக்கும் விளையாட்டு வீர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் இது குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டு போட்டி, இந்தியாவில் முதல் இடத்தில் இருந்தது. இப்போது அந்த இடத்தை கிரிக்கெட் விளையாட்டு பிடித்து விட்டது. ஹாக்கி நான்காவது இடத்திற்கு வந்துவிட்டது, என கூறியுள்ளார்.

மேலும், தமிழக அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறது. எனவே மாணவ மாணவிகள் கல்வியோடு விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி விளையாட வேண்டும். இதனால் உடலும் உள்ளமும் உற்ற உணர்வு அடையும். மேலும், ஆயுட்காலமும் நீட்டிக்கும், என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், விளையாட்டுத்துறையில், தமிழகம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடிக்கும் எனவும் பேசியுள்ளார்.

அப்பொழுது, மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கடை மடை பகுதிகளுக்கும் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து  விடப்பட்ட தண்ணீர் தற்போது வந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இதையும் படிக்க || சக கவுன்சிலரை "_____" என திட்டிய திமுக கவுன்சிலர்... போர்க்களமான நகரமன்ற அலுவலகம்!!