பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனையா..? அதிரடி வேட்டையில் இறங்கிய டி.ஜி.பி...

பள்ளி,  கல்லூரி அருகே குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனையா..? அதிரடி வேட்டையில் இறங்கிய டி.ஜி.பி...

டிசம்பர் 6ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும் என அனைத்து காவல் துறையினருக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை இதுபோன்ற கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன  நடவடிக்கை பாயும் என்பதை தமிழக காவல் இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடிப்பதை தொடர்ந்து இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், அதேபோன்று கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் மது விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் செய்யும் நபர்களுக்கு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை நின்றுவிடாமல் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி போன்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பையும் தொடர்ந்து  மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள சைலேந்திரபாபு,  இந்த பணியினை சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல் இயக்குனர் சட்டம்-ஒழுங்கு ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.