வன காவலர்கள் இடையே போதை தகராறு: செய்தியாளரை கத்தியை காட்டி விரட்டி கற்களை வீசி தாக்கிய போதை காவலர் ...

சீர்காழி வனத்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தகராறை செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் மீது, போதையில் இருந்த வன காவலர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வன காவலர்கள் இடையே போதை தகராறு: செய்தியாளரை கத்தியை காட்டி விரட்டி கற்களை வீசி தாக்கிய போதை காவலர் ...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தை, இரவு நேரத்தில் பாதுகாக்க வன காவலர் நடேசன் நியமிக்கபட்டார். இரவு பணிக்கு முழு போதையில் வந்த நடேசனிடம், சக வன காவலர்கள் முத்துகிருஷ்ணன், கலையரசன், துளசிமலை ஆகியோர் தேக்கு மரம் காணாமல் போனதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.

 வாக்குவாதம் முற்றிய நிலையில், அலுவலகத்தை விட்டு வெளியே சாலையில் வந்து அருவருக்கதக்க வார்த்தையில் பேசி சண்டையிட்டனர். இதனையறிந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், வன காவலர்கள் சண்டையிடும் காட்சிகளை தமது செல்போனில் படம்பிடித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வனக்காவலர் நடேசன், கையில் கத்தியை காட்டி விரட்டியதுடன், கற்களை வீசியும் தாக்க முயன்றுள்ளார். இதில் செய்தியாளர் அதிஷ்டவசமாக தப்பினார். இதனையடுத்து நடேசனுடன் சக வனகாவலர்கள் இனைந்து செய்தியாளரை மிரட்டியதுடன் தரக்குறைவாகவும் பேசியுள்ளனர்.

நாள்தோறும் இவர்கள் குடிபோதையில் சன்டையிடுவதும், அதனை கேள்வி கேட்கும் அக்கம்பக்கத்தினரை மிரட்டுவதும் தொடர் கதையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.