கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் 490 பேரூராட்சிகளில் குடிநீர் வசதி - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக 490 பேரூராட்சிகளில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் 490 பேரூராட்சிகளில் குடிநீர் வசதி - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் பேசி தீர்வுகாண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கடந்த 10 ஆண்டுகளில் கூட்டு குடிநீர் திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். தற்போது 490 பேரூராட்சிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கிருந்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

4 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 130 பேருராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவாதாக கூறிய அவர், ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.  திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு காவிரி நீரை அடிப்படையாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.