குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்... சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்...

மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்... சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்...

மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மழையின் காரணமாக அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடும், அதனால் தொற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் பாதுகாப்பு அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

குறிப்பாக, குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைத்து பின்னர் ஆறவைத்து பருக வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம், வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அல்லது தரைமட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.