பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? குழப்பத்தை ஏற்படுத்திய டாக்டர்கள்... 

சென்னை திருவொற்றியூரில் தனக்கு பிறந்தது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்ற குழப்பத்தை மருத்துவர்கள் உண்டாக்கியதாக தம்பதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? குழப்பத்தை ஏற்படுத்திய டாக்டர்கள்... 

சென்னை திருவொற்றியூர் கல்யாண செட்டி பகுதியைச் சார்ந்த ரகுநாத் புஷ்பா தம்பதியினருக்கு பிரசவ வலியின் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் சென்னை திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது குழந்தை பிறந்தவுடன் செவிலியர்கள் வந்து பெற்றோர்களிடம் குழந்தையை கொடுத்துள்ளனர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு ஆண் குழந்தையை வீட்டிற்கும் எடுத்து வந்துள்ளனர் பின்னர் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்வதற்காக திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கேட்கும் போது ஆன்லைன் பதிவில் இன்னும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பல நாட்கள் கழித்து பெற்றோர்களின் பெயர்களை வைத்து ஒப்பிட்டு உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவேட்டில் இருப்பதாகவும் இதனை மாற்ற வேண்டுமென்றால் மருத்துவமனைக்கு சென்று மாற்றி வருமாறு கூறியுள்ளனர்

ஆனால் மருத்துவமனையில் கேட்டபொழுது முதலில் விசாரணை செய்வதாக கூறியுள்ளனர் பின்னர் மருத்துவமனை பதிவேட்டில் ஆண் குழந்தை என்று சரியாக உள்ளது. என்றும் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி தட்டிக்கழித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த பெற்றோர்கள் மாநகராட்சி அலுவலகம் மருத்துவமனை என இரண்டு இடங்களிலும் அலைந்து திரிந்து சரியான பதில் கிடைக்காததால் இன்று மருத்துவமனையின் முன்பு தரையில் அமர்ந்து உறவினர்களோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இதுபோன்ற மாநகராட்சியினரின் அஜாக்கிரதையான செயல்களால் தனக்கு பிறந்தது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்ற குழப்பம் தனக்கே ஏற்பட்டு விட்டதாக மனமுடைந்து குற்றம் சாட்டினார்.