துப்பாக்கிச்சுடும் பயிற்சியின் போது விபரீதம்... குறி தவறிய தோட்டா சிறுவனின் தலையில் பாய்ந்தது...

காவலர்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் சிறுவனின் தலையில் பட்டு படுகாயமடைந்துள்ளார்

துப்பாக்கிச்சுடும் பயிற்சியின் போது விபரீதம்... குறி தவறிய தோட்டா சிறுவனின் தலையில் பாய்ந்தது...

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ளது அம்மாசத்திரம். இங்கு காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது இன்று காலை மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்டனர். அப்பொழுது கொத்தமங்கலம் பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது 11 வயது மகன் தனது தாத்தா வீட்டிற்கு வந்திருந்தார். 

அப்பொழுது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் துப்பாக்கியிலிருந்து இரண்டு குண்டுகள் தவறுதலாக அருகில் உள்ள வீட்டினுள் பாய்ந்தது. இதில் ஒரு குண்டு அவர்களது வீட்டிலும், மற்றொரு குண்டு வீட்டினுள் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவனின் தலையிலும் பட்டது. அப்போது அலறி துடித்தபடி கீழே விழுந்த புகழேந்தியை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவர் தற்போது அபாய கட்டத்தில் இருப்பதாகவும், தலையில் குண்டு பாய்ந்ததால் பலத்த அடி பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சம்பவ இடத்திற்கு கீரனூர் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரடியாக வருகை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையமானது பாதுகாப்பில்லாமல் இருப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்பொழுது அந்த சிறுவனின் தலையில் மூளைப் பகுதிக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.