அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் ஆக. 11 வரை பக்தர்கள் வர தடை!  

அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் ஆகஸ்ட்-11 வரை பக்தர்களுக்கான தரிசனம் முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.

அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் ஆக. 11 வரை பக்தர்கள் வர தடை!   

அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் ஆகஸ்ட்-11 வரை பக்தர்களுக்கான தரிசனம் முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனாநோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும், விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, பிரிவு 34 ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள அனைத்து இந்து, கிறிஸ்துவம் மற்றும் முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் ஆகஸ்ட்-11 வரை பக்தர்களுக்கான தரிசனம் முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட காலத்தில், எந்த வழிபாட்டுதலத்திலும், விலங்குகள் பலியிடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல், திருவிழாக்கள் நடத்துதல்,தேரோட்டம் நடத்துதல், ஜெப கூட்டங்கள் நடத்துதல், மசூதிகளில் கூட்டுத் தொழுகைகள் நடத்துதல், கூட்டுப் பிராத்தனைகள் நடத்துதல், மதஊர்வலங்கள் நடத்துதல் உள்ளிட்ட அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பினரும் உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா பரவாமல் தடுக்க போதிய ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.