அதிமுகவை அழித்துதான் பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

அதிமுகவை அழித்து தான் பாஜகவை வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.

அதிமுகவை அழித்துதான் பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கர்ப்பிணி பெண்களுக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டத்தன் கீழ் பொருட்கள் வாங்கும் டெண்டர் ஆவினுக்கு வழங்காமல் தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் பாஜக மீது அதிமுக தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அதிமுகவை அழித்து தான் கட்சி வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் பாஜகவுக்கு இல்லை எனக் கூறியுள்ளார்.