சுகாதார சீர்கேட்டால் பரவும் டெங்கு... மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு...

திண்டுக்கல் அருகே உள்ள மொட்டனம் பட்டியை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதால் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.

சுகாதார சீர்கேட்டால் பரவும் டெங்கு... மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு...

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மொட்டனம் பட்டி பகுதியில் உள்ள  ஆண்டனிநகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் இன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த இப்பகுதி பொதுமக்கள், அடியனூத்து ஊராட்சிக்கும் திண்டுக்கல் மாநகராட்சிக்கும் எல்லை பகுதியாக அமைந்துள்ள இந்தப் பகுதியில்  கழிவு நீர் ஓடைகளும் , குடிநீர் இணைப்பு களும் முறையாக இல்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சியில் மனு கொடுத்தால் ஊராட்சி மன்றத்தை அணுகுங்கள் என கூறி அலைக்கழிப்பதாங இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  தற்போது திண்டுக்கல் மாவட்டதிலேயே மதன் முறையாக எங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி ஒருவர் அரசு மருத்துவமனையில் உள்ளார் ஆகவே டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்கவும் , குழந்தைன் பெரியவர்கள் ஆகியோர் பெருமளவில் எங்கள் பகுதியால் குடியிருந்து வருவதாலும் அவசர்க்கால நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் கழிவுநீர் ஓடை வரத்து வாய்க்கால் போன்றவற்றை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.